தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி: மம்தாவுக்கு ஸ்டாலின் ஆதரவு

தினமணி

மத்திய பாஜக அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 பாஜக, காங்கிரஸýக்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சியினரை ஓரணியில் திரட்டும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
 இதற்காக மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் அவர் ஆதரவு திரட்டி வருகிறார். அண்மையில் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக ஆதரவு கேட்டிருந்தார்.
 இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், தமது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "மாநில கட்சிகளின் ஒற்றுமைக்காகவும், வலிமையான கூட்டாட்சிக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும்.
 எதேச்சதிகாரத்துடன், ஜனநாயகத்துக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு என்னுடைய ஆதரவு உண்டு' என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT