தமிழ்நாடு

திருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்

தினமணி

திருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வலியுறுத்தினார்.
 சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் திருக்குறள் மையம் ஆகியவற்றின் சார்பில் திருக்குறள் மாநாடு சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இம்மாநாட்டில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு "திருக்குறள் சிந்தனைக் கோட்பாடுகள் ஆக்கும் புத்தாய்வு' என்ற நூலை வெளியிட்டு பேசியது: ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய திருக்குறள் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. பைபிளுக்குப் பிறகு அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் தமிழின் அடையாளமாகத் திகழ்கிறது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் அமைப்பான, 'யுனெஸ்கோ'விடம், திருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக அறிவிக்க கோரியுள்ளோம் என்றார்.
 முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் பேசுகையில், 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கி அரசு ஊக்குவித்து வருகிறது எனக் குறிப்பிட்டார். இதில் திருக்குறள் அறிஞர் சொ.பத்மநாபன், பேராசிரியர்கள் இ.சுந்தரமூர்த்தி, கு.மோகனராசு திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடப் பொறுப்பாளர் து.ஜானகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT