முகப்பு
தமிழ்நாடு

சென்னைப் பல்கலை. எம்.எல். தேர்வு: ஜூன் 5-இல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனி படிப்பு) சட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ஜூன் 5-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனி படிப்பு) சட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ஜூன் 5-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 
இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: பல்கலைக்கழக எம்.எல். (தனி) பருவத் தேர்வுகள் ஜூன் 5-ஆம் தேதி தொடங்கி ஜூன் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கான தேர்வு கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
தேர்வர்கள், தேர்வறை நுழைவுச் சீட்டை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →