முகப்பு
தமிழ்நாடு

தொல்காப்பியர் குறித்து கவிஞர் வைரமுத்து நாளை கட்டுரையாற்றுகிறார்

தமிழ் மொழிகளின் ஆளுமைகளின் வரிசையில் தொல்காப்பியர் குறித்து கவிஞர் வைரமுத்து சென்னையில் புதன்கிழமை (மே 2) கட்டுரையாற்றுகிறார். 

தமிழ்நாடு

தொல்காப்பியர் குறித்து கவிஞர் வைரமுத்து நாளை கட்டுரையாற்றுகிறார்

தமிழ் மொழிகளின் ஆளுமைகளின் வரிசையில் தொல்காப்பியர் குறித்து கவிஞர் வைரமுத்து சென்னையில் புதன்கிழமை (மே 2) கட்டுரையாற்றுகிறார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தமிழ் மொழிகளின் ஆளுமைகளின் வரிசையில் தொல்காப்பியர் குறித்து கவிஞர் வைரமுத்து சென்னையில் புதன்கிழமை (மே 2) கட்டுரையாற்றுகிறார். 
'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் தமிழ் ஆளுமைகள் குறித்து அவர் கட்டுரையாற்றி வருகிறார். அந்த வரிசையில் இப்போது தொல்காப்பியர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இது அவரது 16- ஆவது கட்டுரையாகும். தொல்காப்பியர் குறித்து வைரமுத்து கட்டுரை வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (மே 2) மாலை 6 மணிக்கு சென்னை அடையாறு சிவாஜி நினைவு மண்டபத்திற்கு அடுத்துள்ள ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறவுள்ளது. 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் தலைமை வகிக்கிறார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுக உரை ஆற்றவுள்ளார். வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், வெங்கடேஷ், ராஜசேகர், தமிழரசு, செல்லத்துரை, மாந்துறை ஜெயராமன், காதர்மைதீன், சண்முகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்
 
முழு கட்டுரையைப் படிக்க →