சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளனர்.
திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை உள்ள 140 கி.மீ நடைப்பயணம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று பிற்பகல் 12.30-க்கு மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், முன்னாள் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே.வாசுகி ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
நடைப்பயணம் மேற்கொண்டவர்களை காவல்துறையினர் தடுத்திநிறுத்தி கைது செய்து வருகின்றனர். பெண்களையும், மார்க்சிஸ்ட் தொண்டர்களையும் அடக்குமுறையைக் கையாண்டு தரதரவென இழுத்து கைது செய்தால் திருவண்ணாமலையில் பெரும் பதட்டம் நிலவி வருகின்றது.
தடையை மீறி மார்க்சிஸ்ட் தொண்டர்களும், விவசாயிகளும் நடைப்பயணம் சென்றவண்ணம் உள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.