தமிழ்நாடு

புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு: ரகுபதி ஆணையத்தை கலைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை கலைத்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.  

புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையம் 2015-ஆம் ஆண்டு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆணையத்துக்கு தடை விதித்த பிறகும் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு ரூ.2.23 கோடி நிதியை ஒதுக்கியது. இதையடுத்து, தடை விதிக்கப்பட்ட ஒரு ஆணையத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. 

இதையடுத்து, இந்த தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் சார்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கின் இடைக்கால மனு மீதான விசாரணை மட்டும் வெள்ளிக்கிழமையே தொடங்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

அதன்படி இந்த வழக்கின் இடைக்கால மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த விசாரணையின் முடிவில் ரகுபதி ஆணையத்தை கலைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், ஆணையத்துக்காக வழங்கப்பட்ட நிதி, பணியாளர் ஒதுக்கீடு, பங்களா உள்ளிட்டவற்றை அரசு நிறுத்த வேண்டும். ரகுபதி ஆணையம் தங்களிடம் உள்ள ஆவணங்களை அரசிடம் 2 வாரத்தில் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT