தமிழ்நாடு

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தம்

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையானது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மாலை 04.30 மணியளவில் காவிரி மருத்துவமனை தரப்பில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பினை போதிய அளவில் பலப்படுத்த டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வழக்கமான ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT