தமிழ்நாடு

திருவாரூர் முத்துவேல் கருணாநிதி: என்ன இது?.. ராதாரவியைக் கண்டித்த கருணாநிதி   

திரைப்பட விழா ஒன்றில் அரசியல் பற்றி பேசிய நடிகர் ராதாரவியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கண்டித்த சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

DIN

சென்னை: திரைப்பட விழா ஒன்றில் அரசியல் பற்றி பேசிய நடிகர் ராதாரவியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கண்டித்த சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1996-2001 காலகட்டத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது, ராதாரவி நடிகர் சங்கச் செயலாளராக இருந்தார். அப்பொழுது திரைப்படம் தொடர்பான நிகழ்வு ஒன்றுக்கு கருணாநிதி தலைமை வகிக்க அழைக்கப்பட்டிருந்தார். இது திரைப்படம் தொடர்பான நிகழ்வு என்பதால் யாரும் அரசியல் பேச வேண்டாம் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் ராதாரவி தனது பேச்சைத் துவக்கும் பொழுது, கருணாநிதி என்றால் திமுக என்று அர்த்தம்... என்று துவக்கினார். உடனடியாக குறுக்கிட்ட கருணாநிதி, அரசியல் பேச வேண்டாம் என்று தான் கூறியதை நினைவுறுத்தினார்.

அதற்கு ராதாரவி, இல்லைன்ணே.. திமுக என்றால் திருவாரூர் முத்துவேல் கருணாநிதி என்று சொல்ல வந்தேன் என்று கூறவும், கருணாநிதி வாய்விட்டு சிரித்து விட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: தமிழக அரசு முடிவு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; முஸ்தஃபிசுர் ரஹ்மானை முந்திய நியூசி. வீரர்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜென் ஸி தலைமுறையிடையே ஆதிக்கம் செலுத்துகிறாரா ராகுல்? பிரஷாந்த் கிஷோர் பதில்

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.88,635 கோடியாக சரிவு!

SCROLL FOR NEXT