தமிழ்நாடு

18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

DIN

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் நடைபெற்ற வருகிறது. 

இந்த வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் தரப்பிலும், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த
வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரத்தின் வாதமும் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி
வாதங்களை முன்வைத்து வருகிறார்.

இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராக முடியாததால் முதல்வர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி சத்தியநாராயணன் வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT