தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்குகள்: சிபிஐ விசாரணைக்கு தடை நீட்டிப்பு

DIN


தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 
தமிழகத்தில் சிலை கடத்தலைத் தடுக்கக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன், இது தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT