தமிழ்நாடு

கேரள வெள்ள பாதிப்பு: திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கல் 

கேரள வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பாக ரூ.1 கோடி நிதியுதவியை அக்கட்சியின்  செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்

DIN

சென்னை: கேரள வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பாக ரூ.1 கோடி நிதியுதவியை அக்கட்சியின்  செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கடும் மழை மற்றும் அதனால் உண்டான நிலச்சரிவின் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.  பல்வேறு தரப்பினரும் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கேரள வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பாக ரூ.1 கோடி நிதியுதவியை அக்கட்சியின்  செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

கேரள வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவியை செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அத்துடன் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

SCROLL FOR NEXT