தமிழ்நாடு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்கள் 27 பேருக்கு காவல் நீட்டிப்பு 

DNS

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைபட்டுள்ள  தமிழக மீனவா்கள் 27 பேருக்கு வரும் 24 ஆம் தேதி வரை காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் நாகை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து கடந்த 11 ஆம் தேதி நான்கு நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 27 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா். மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனா். மேலும் அவர்களது நான்கு படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

கைதான 27 மீனவா்களும்  ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில்,வியாழக்கிழமை மீண்டும் 27 மீனவா்களும் ஊா்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் வீட்டில் ஆஜா்படுத்தப்பட்டனா். விசாரணைக்கு பின்பு ஆக 24 ஆம் தேதி வரையில் அவர்களுக்கு காவல் நீட்டித்து நீதிபதி  உத்தரவிட்டாா். இதனையடுத்து மீனவா்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மீனவா்கள் விடுவிக்கப்பட கூடும் என எதிா்பாா்த்த நிலையில் காவல்நீட்டிப்பு செய்யப்பட்டது உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மத்திய.மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுத்து மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT