தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்.: 23-இல் இறுதிக் கட்ட கலந்தாய்வு

DIN


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தற்போது காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு தேதி ஆகஸ்ட் 21 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு ஒரே நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் கூறுகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 எம்.பி.பி.எஸ். மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 19 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான காலியிடங்கள் மட்டுமே உள்ளதால் இரண்டு நாள்கள் கலந்தாய்வு ஒரே நாளாக மாற்றப்பட்டுள்ளது.
பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்தி முடிப்பதற்கு செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது என்று தெரிவித்தனர்.
அதன்படி, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஆக.23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT