தமிழ்நாடு

திமுகவுக்கு தலைமை ஏற்கும் ஸ்டாலினுக்கு அழகிரியை சமாளிக்கும் திறன் இருக்கிறதா?

பல சவால்களையும், தடைகளையும் தகர்த்துத்தான் ஒருவன் தலைவனாகிறான். ஆனால் திமுகவின் தலைவராகவிருக்கும் ஸ்டாலினுக்கு இனிதான் சவால்களும், தடைகளும் காத்திருக்கின்றன.

ENS

பல சவால்களையும், தடைகளையும் தகர்த்துத்தான் ஒருவன் தலைவனாகிறான். ஆனால் திமுகவின் தலைவராகவிருக்கும் ஸ்டாலினுக்கு இனிதான் சவால்களும், தடைகளும் காத்திருக்கின்றன.

குடும்பத்துக்குள் அதிகாரபப் போட்டி, கூட்டணிக் கட்சிகள், நட்புக் கட்சிகளுடன் தொடர்ந்து தோழமை பேணுவது, திராவிடம் எனும் கொள்கையை தொடர்ந்து கொண்டு செல்வது என ஏராளமான சவால்கள் ஸ்டாலின் முன் ஏற்கனவே வந்து வரிசைக்கட்டி நிற்கின்றன.

திமுகவின் தலைவராக இருந்த மு.கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து அப்பதவிக்கு போட்டியின்றி தேர்வாக உள்ளார் மு.க. ஸ்டாலின்.

வெறும் ரோஜாக்கள் மட்டுமல்ல, ரோஜா முட்கள் நிறைந்த பாதையில் ஸ்டாலினின் பயணம் தொடங்கவிருக்கும் நாளை திமுகவின் ஏராளமான தொண்டர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். 

அண்ணாதுரையால் தொடங்கப்பட்ட கட்சியை, அவருக்குப் பிறகு தனி ஒருவராகக் கட்டிக் காத்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. எம்ஜிஆர், வைகோவின் பிரிவுகளுக்குப் பிறகும் திமுகவின் பாதையை வளர்ச்சிப்பாதையாகவே வைத்திருந்தவர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வகித்தப் பதவிக்கு புதிய ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு, அதாவது ஹனிமூன் காலம் என்று சொல்லப்படும் காலம் கூட ஸ்டாலினுக்கு இல்லை. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை அமைக்கும் நேரடி பொறுப்புக்கு வருகிறார்.

கடந்த 2004, 2009ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, அடுத்த தேர்தலிலும் அதே கூட்டணியில் நிலைப்பதா இல்லை புதிய முடிவினை எடுப்பதா என்பதே மிகப்பெரிய சவாலான கேள்வி. இங்கிருந்துதான் அவரது சவால் தொடங்குவதாக அரசியல் ஆலோசகர் ஆர். மணி கூறுகிறார்.

தற்போது திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக பலமான கூட்டணிக் கட்சியாக திகழ்கின்றன. இப்போதிருக்கும் சூழ்நிலையில், தோழமைக் கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து பலத்தைக் கூட்டுவாரா அல்லது மாற்று வழியாக பாஜகவுடன் கைகோர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

கட்சித் தலைமைக்கு ஸ்டாலின் தகுதியானவரா என்று வெளியில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மூலம் கூட பதில் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கட்சித் தலைமைக்கு ஸ்டாலின் தகுதியானவரா என்று தனது சகோதரர் மு.க அழகிரி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் ஸ்டாலின் இருக்கிறார். அவரை எப்படி சமாளிப்பது என்று எங்கள் தலைவருக்குத் தெரியும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள்.

திமுகவை தொடர்ந்து கவனித்து வருபவர்களோ, அழகிரியுடனான சண்டையை ஸ்டாலின் மிக எளிதாகவே கையாண்டுவிடுவார். ஆனால் திமுக மீது தொண்டர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் கட்டிக் காப்பதே அவசியம் என்று கருத்து கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT