தமிழ்நாடு

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூ ட்யூப் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய நோட்டீஸ் 

DIN

சென்னை: சமூக வலைதளங்களில் புதிய கணக்கு தொடங்குவது தொடர்பான வழக்கில் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூ ட்யூப் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

இனி பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், ஜிமெயில் சேவையிலும் புதிய கணக்கு தொடங்குபவர்கள் தங்களது ஆதார் எண்ணை அளித்து பதிவு செய்து கொள்வதைக் கட்டாயமாக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி தெரிவித்த கருத்துக்களவான:

இந்த வழக்கு தொடர்பாக அடிப்படை விபரங்கள் கேட்டு  அரசுத் தரப்பில் தொடர்பு கொண்ட பொழுது ஏன் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூ ட்யூப் நிறுவனங்கள் முறையான விபரங்கள் அளிக்கவில்லை?

ஏன் இந்தியாவில் இந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்பாக முறையான குறை தீர் அலுவலர்களை நியமிக்கவில்லை?

இந்த நிறுவனங்களின் சேவைகளுக்கு உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்ட ஒரு நாடாக இந்தியா இருக்கும் பொழுது, ஏன் இந்தியாவில் இந்த நிறுவனங்களுக்கு என்று தனியாக அலுவலகம் திறக்கப்படவில்லை?

இத்தகைய கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் முறையாக பதிலளிக்குமாறு இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT