அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் இன்று கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது குமரி கடல் முதல், வடக்கு கேரளா பகுதி வரை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை (டிசம்பர் 6 ஆம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் தெற்கு வங்க கடல், தென் மேற்கு வங்க கடல், குமரி கடலுக்கு 5, 6, 7ஆம் தேதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. தாமரைபாக்கம், 5, பழநி, 4, பூந்தமல்லி, பாபநாசம் 3 செ.மீ., மழை பெய்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.