தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

DIN


தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஞாயிற்றுக்கிழமை (டிச.9) வலுவடைந்து ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், தமிழகத்துக்கு பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தத்தாழ்வு நிலை காணப்படுகிறது. 
ஓரிரு இடங்களில் மழை: 
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT