தமிழ்நாடு

4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும்

DIN

ஐந்து மாநிலத் தேர்தல்களில் தெலங்கானாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜகவே வெற்றி பெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
 கோவைக்கு சனிக்கிழமை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
 5 மாநிலத் தேர்தலில் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துவிட்டுதான் வாக்கு சேகரித்துள்ளோம். கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும் தெலங்கானா தவிர்த்த மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியின் ஆட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. தலைகீழாக நடந்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் கூறியுள்ளார்.
 தாமரை மலர தலைகீழாக நடக்கத் தேவையில்லை. மாறாக நேர்மையாக நடந்தாலே போதும். இடதுசாரிகள் ஒரு மாநிலத்தில்தான் ஆட்சியில் இருக்கின்றனர். ஆனால் பாஜக 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது என்று நீர்வளத் துறை ஆணையரே கூறியிருப்பதால் புதிய அணை குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT