தமிழ்நாடு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

DIN


புதுதில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதை ஏற்ற மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

இதன்படி காவிரிமேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் தில்லியிலும், காவிரி ஒழுங்காற்று ஆணைய அலுவலகம் பெங்களூருவிலும் செயல்படுகிறது. மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவராகவும் செயல்பட்டு வரும் மசூத் ஹூசைன், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தற்காலிக தலைவராக இருந்து வருகிறார். அவரது தலைமையில் ஆணையத்தின் பணிகள் நடைபெறுகின்றன. 

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர, சுதந்திரமான தலைவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது. இதற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி மேலாண்மை ஆணைய இடைக்காலத் தலைவரான மசூத் ஹூசைன் பாரபட்சமாக செயல்படுவதாகவும், அவர் ஆணையத் தலைவராக நீடிப்பது பொருத்தமற்றது. மசூத் ஹூசைன் இரட்டைப் பதவி வகிப்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க மத்திய நீர்வளத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT