தமிழ்நாடு

ரகசிய ஆடியோ வெளியிடுவோம் என தினகரன் பிளாக் மெயில் செய்து வருகிறார்: அமைச்சா் பி.தங்கமணி

DIN

நாமக்கல்: ரகசிய ஆடியோ வெளியிடுவோம் என்ற பெயரில் தினகரன் ஒவ்வொருவரையும் பிளாக் மெயில் செய்து வருகிறார் என மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தார். 

நாமக்கலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வயல்களில் தண்ணீா் தேங்கி உள்ளதால் அங்கு உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு கூடுதல் பணியாளா்களை அனுப்பி உள்ளோம். அங்கும் கூடிய விரைவில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கு ஒரு வார காலத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உருவாக்கி தந்துள்ளார். தற்போது புதிய மின் திட்டங்கள் நடைபெற்று வருவதால் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் 4 ஆயிரம் மெகா வாட் வரை மின் உற்பத்தி உயரும். புதிய மின் பாதை அமைக்கப்பட்டால் தான் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை முழுமையாக வழங்க முடியும். 

மின் வாரியத்தில் உதவிப்பொறியாளா் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக்கொடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திடம் கோரியுள்ளோம். இந்த மாதத்திற்குள் நடத்திக்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 2,000 உதவியாளர்கள், 250 கணக்கு இளநிலை உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கஜா புயலால் தாமதமாகி வருகிறது. சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு அது குறித்து மின்வாரியம் முறையாக அறிவிக்கும். 

மேலும், நாடாளுமன்ற தோ்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும். ரகசிய ஆடியோ வெளியிடுவோம் என்ற பெயரில் தினகரன் ஒவ்வொருவரையும் பிளாக் மெயில் செய்து வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT