தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவர்க்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி மனு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு   

மூன்றாம் பாலினத்தவர்க்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது  தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

DIN

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்க்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது  தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னையைச் சேர்ந்த திருநங்கை சுதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கோரியிருந்தாவது:

'தமிழக அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் கணவனால் கை விடப்பட்டோருக்கு என தனியாக இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. 

அதேபோல மூன்றாம் பாலினத்தவர்க்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அவர்களிலும் பட்டப் பப்பு மற்றும் பொறியியியல் முடித்தவர்கள் இருக்கிறாரகள். தகுந்த வாய்ப்பினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். எனவே இதுகுறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கானது திங்களன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வரும் 17-ஆம் தேதியன்று பதில் அளிக்குமாறு கூறிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கினை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

லஞ்ச வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரின் ஜாமீன் மனு தள்ளுபடி

நாளைய மின்தடை: பீளமேடு

SCROLL FOR NEXT