தமிழ்நாடு

தமிழகத்தில் கழக ஆட்சியே மேலோங்கி இருக்கும்: முதல்வர் பழனிசாமி

DIN


தமிழகத்தில் கழக ஆட்சியே மோலோங்கி இருக்கும் என்று 5 மாநில தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, 

"5 மாநில தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை கழகங்களின் ஆட்சியே மேலோங்கி நிற்கும். இதில், பின்னடைவு இல்லை. மத்தியப் பிரதேசத்தில் 109 தொகுதிக்கும், 114 தொகுதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒரு சில இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன.   

கஜா புயல் தொடர்பான அறிக்கை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் கோடி கோரியுள்ளோம். அதனால், அதற்கு மத்திய அரசு எவ்வளவு நிதி தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு ஒவ்வொரு முறை அணை கட்டிய போதும் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. அங்கு அணைகள் கட்டுவதற்கு முன் தமிழகத்துக்கு தேவையான குடிநீர் சரியாக வந்துகொண்டிருந்தது. காவிரி தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை கர்நாடக அரசு மதித்ததாக வரலாறே கிடையாது. 

அங்கு 3 அணைகளில் தண்ணீர் இருந்தபோதும் தர மறுக்கும் கர்நாடக மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் எப்படி தண்ணீர் கிடைக்கும். 

மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். காவிரி நீரை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன" என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT