தமிழ்நாடு

நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்: ரஜினிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

DIN

ரஜினியின் பிறந்தநாளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கர்நாடகாவில் ராமோசி ராவ் மற்றும் ரமா பாய்க்கு 4ஆவது குழந்தையாகப் பிறந்தார். 

பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் ரஜினி கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில்
பேருந்து நடத்துனராக பணியாற்றினார். 

இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் நடித்தது, பின்னர் அவரை திரையுலகில் முடிசூடா நாயகனாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். 

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில்,
என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT