தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது. 

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா உறவினர்கள், அவரது உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

சசிகலாவுக்கு எதிராக விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடம் அவரது வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது. 

முன்னதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் இருவரும் 18ஆம் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT