தமிழ்நாடு

புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது சென்னைக்கு அருகே 690 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. 

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே 17ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும். இதன்காரணமாக இன்றும், நாளையும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. 

எனவே மீனவர்கள் 16, 17, 18 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். 45 முதல் 55 கி.மீ. வரை தரைக்காற்று பலமாக வீசும். சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT