தமிழ்நாடு

மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் 'பெய்ட்டி' புயல் 

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் 'பெய்ட்டி' புயலானது, மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே திங்கள் பிற்பகல் கரையைக் கடக்கும்  என்று வானிலைஆய்வுமையம் தெரிவித்துள்ளது.  

DIN

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் 'பெய்ட்டி' புயலானது, மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே திங்கள் பிற்பகல் கரையைக் கடக்கும்  என்று வானிலைஆய்வுமையம் தெரிவித்துள்ளது.   

இதுதொடர்பாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு: 

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது,  புயலாக உருமாறியுள்ளது. 'பெய்ட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது, தற்போது சென்னையில்  இருந்து 510 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 
 
சரியாக மசூலிப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 670 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள 'பெய்ட்டி' புயலானது, மசூலிப்பட்டினம் - காக்கி நாடா இடையே திங்கள் பிற்பகல் கரையக் கடக்கும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

SCROLL FOR NEXT