தமிழ்நாடு

கோரைக்குப்பத்தில் கடல்சீற்றம் காரணமாக 156 மீனவர்கள் முகாமில் தங்க வைப்பு 

DIN


திருவள்ளூர் கோரைக்குப்பத்தில் கடல்சீற்றம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 156 மீனவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தென்கிழக்கு வங்கக் கடலில் சனிக்கிழமை இரவு உருவான "பெய்ட்டி' புயல் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 11 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது, சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. 

இந்த புயல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, தென் மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. 16 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்தது. 

இந்நிலையில், புயலின் வேகம் 16 கி.மீட்டரில் இருந்து 23 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அருகே 320 கி.மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 160 கி.மீட்டர் தொலைவிலும், காக்கி நாடாவுக்கு தெற்கே 190 கி.மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

புயலாக வலு குறைந்து பிற்பகல் ஆந்திர கடலோரத்தில் காக்கிநாடா கடற்கரை அருகே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக்கடக்கும் போது 70 - 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கோரைக்குப்பத்தில் ஏற்பட்டுள்ள கடல்சீற்றம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 69 குழந்தைகள் உட்பட156 மீனவர்கள் புயல் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT