தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினை விட சேடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும்? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

மு.க.ஸ்டாலினை விட சேடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

DIN


சென்னை: மு.க.ஸ்டாலினை விட சேடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ் கட்சிக்குதான் ஸ்டாலின் கூறும் சாடிஸ்ட் வார்த்தை பொருந்தும் என்றார். 

சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததால், திமுகவின் 2 ஆம் கட்ட தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது புலியை பார்த்து பூனை சூடுபோட்டது போன்றது. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த போது நாராயணசாமியை தவிர வேறு யாரும் கைதட்டவில்லை. 

சிலை திறப்பு விழாவுக்கு அழைத்து கழுத்தறுத்தது போன்று உணருகிறார்கள். கருணாநிதியின் ஆளுமையுடன் ஸ்டாலின் முன்மொழிவை ஒப்பிட முடியாது என்றார்.

மேலும், சேடிஸ்ட் என்று சொல்லக்கூடிய வார்த்தை யாருக்கு பொருந்தும்? மு.க.ஸ்டாலினை விட சேடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும்? சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக்குதான் ஸ்டாலின் கூறும் சேடிஸ்ட் வார்த்தை பொருந்தும்.

மத்தியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகே, தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என கூறினார் ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT