தமிழ்நாடு

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா? 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 72.48 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 67.38 ஆக விலை

DIN


சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 72.48 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 67.38 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது.

தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகமாக இருந்து வந்தது.

இதனிடையே 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சிறிது ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக எந்தவித மாற்றமின்றியும், சிறிது குறைந்து  விற்பனை செய்யப்பட்டு வந்தது

இந்நிலையில், சென்னையில், நேற்றைய விலையில் இருந்து இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ. 72.48 ஆகவும், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ. 67.38 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன என்ன வார்த்தைகளோ... ஸ்ரேயா சரண்!

200 டிகிரி கோணத்தில் படம் பார்க்கலாம்! ஸெப்ரானிக்ஸின் புதிய புரொஜெக்டர்!

நினைவோ ஒரு பறவை... பிரியா மணி!

நவம்பர் வானம்... சம்யுக்தா!

தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய 125 இந்தியர்கள்! எண்ணிக்கை 1,500 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT