தமிழ்நாடு

தமிழகத்தில் இருவேறு இடங்களில் சம்பவம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 

தமிழகத்தில் இருவேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

தி. இன்பராஜ்

தமிழகத்தில் இருவேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வடலி விளை கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கிருஷ்ணம்மாள், ஜெய மீனா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். 

அப்போது போலீசார் பாதுகாப்பையும் மீறி அலுவலக வளாகத்திற்குள் சென்ற அவர்கள் மூவரும்மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தங்களது உடல்களில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து மூவரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இன்று தீக்குளிக்க முயற்சித்தனர். இதையடுத்து அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக தீக்குளிக்க முயன்றதாக அப்போது அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT