தமிழ்நாடு

பிப்ரவரி 21-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்பேவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

Raghavendran

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அனைவருக்கும் பயன்தரக்கூடிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 7-ஆவது மற்றும் 8-ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 21-ம் தேதி முதல் இந்த தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT