தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் சிலைகள் சேதமடையவில்லை: அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விரைவில் விசாரிக்கப்படும். இதில் சிலைகள் எதுவும் சேதமடையவில்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Raghavendran

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கோயிலுக்குள் இருக்கும் வீர வசந்தராயர் மண்டபம், 36 கடைகள் வரை சேதமடைந்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இதனையடுத்து, மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சனிக்கிழமை காலை முதல் வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் சிலைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு நடத்த விரைவில் குழு அமைக்கப்படும். தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT