தமிழ்நாடு

பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் கைது

பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணனும் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

Raghavendran

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

உதவி பேராசிரியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி தன்னிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், மீதி 29 லட்சத்துக்கு காசோலையாகவும் பெற்றதாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து துணைவேந்தர் கணபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த விசாரணையில் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உதவி பேராசிரியர் பணி நியமனத்தில், துணைவேந்தர் கணபதியுடன் இணைந்து வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் இடைத்தரகராக செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டதால் அவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் தடயத்தை அழிக்க முயன்ற குற்றத்துக்காக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதாவும் கைது செய்யப்பட்டார். இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில், நடைபெற்ற இந்த முறைகேடுகளில் பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணனுக்கு தொடர்புள்ளதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

லஞ்சப்புகாரில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதியின் உறவினர் மதிவாணன் எனவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

SCROLL FOR NEXT