முகப்பு
தமிழ்நாடு

செம்மரக் கடத்தல்: மருத்துவ மாணவர் உள்பட இருவர் கைது

திருப்பதி அருகே செம்மரக் கட்டை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

திருப்பதி அருகே செம்மரக் கட்டை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
   இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருப்பதியை அடுத்த மங்களம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வாளர் விஜய நரசிம்மலு தலைமையிலான அதிரடிப் படை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 வாகனங்களில் சிலர் செம்மரக் கட்டைகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். ஆனால், போலீஸாரைக் கண்டவுடன் அவர்கள் தப்பியோடினர். அவர்களை துரத்திச் சென்ற போலீஸார் இருவரை கைது செய்தனர். 
அவர்களிடமிருந்து ஒரு கார், ரூ. 5 லட்சம் மதிப்பிலான 9 செம்மரக் கட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
 விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  மருத்துவக் கல்லூரி மாணவர் அஜித்குமார் (21) மற்றும் ஏசு (31) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →