முகப்பு
தமிழ்நாடு

உணவக ஊழியர் மீது தாக்குதல்: 6 போலீஸார் பணியிட மாற்றம்

பரமக்குடியில் உணவக ஊழியரை தாக்கிய காவல் சார்பு- ஆய்வாளர் உள்பட 6 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு

உணவக ஊழியர் மீது தாக்குதல்: 6 போலீஸார் பணியிட மாற்றம்

பரமக்குடியில் உணவக ஊழியரை தாக்கிய காவல் சார்பு- ஆய்வாளர் உள்பட 6 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பரமக்குடியில் உணவக ஊழியரை தாக்கிய காவல் சார்பு- ஆய்வாளர் உள்பட 6 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பரமக்குடியில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான உணவகம் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி இரவு, நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் உணவக ஊழியரை கடுமையாக தாக்கும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. உணவக ஊழியர் இலவசமாக உணவு கொடுக்க மறுத்ததால் போலீஸார் தாக்கியதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினர் மீது கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. 
இந்நிலையில் நெடுஞ்சாலை ரோந்து காவல் சார்பு- ஆய்வாளர் முருகேசன், தலைமைக் காவலர்கள் கஜேந்திரன், பாரதி, ராஜமாணிக்கம், மாரிமுத்து, ராமமூர்த்தி ஆகிய 6 பேரையும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →