தமிழ்நாடு

சென்னை பெருநகர விரிவாக்கம்: அரசாணை வெளியீடு

Raghavendran

சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய சென்னை பெருநகர விரிவாக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அர்கோகணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும்
இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை சென்னை பெருநகர குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT