முகப்பு
தமிழ்நாடு

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு உத்தரவிட முடியாது: தேர்தல் ஆணையம் பதில் மனு

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு உத்தரவிட முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:


புது தில்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு உத்தரவிட முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது ஒதுக்கப்பட்டது போல, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி எம்எல்ஏ டிடிவி தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துவதால் அதில் தலையிட முடியாது.  டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. எனவே, தினகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →