தமிழ்நாடு

சென்னையில் ரௌடி பட்டியலில் 978 பேர்

DIN

சென்னையில் காவல்துறை வைத்துள்ள ரௌடி பட்டியலில் 978 பேர் உள்ளனர். இவர்களில் சிறையில் 250 பேரும், தேடப்படும் ரெüடிகளாக 728 பேரும் உள்ளனர்.
சென்னை அருகே செவ்வாய்க்கிழமை 75 ரெüடிகளை ஒரே இடத்தில் காவல்துறையில் பிடித்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ரௌடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.கா.விசுவநாதன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மத்தியக் குற்றப் பிரிவின் கீழ் இயக்கும் ரௌடி ஒழிப்புப் பிரிவு போலீஸார், ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் செயல்படும் ரௌடிகளை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். இவர்கள் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஏ பிளஸ் பிரிவில் ரௌடி கும்பல்களின் தலைவர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளனர். இப்பிரிவில் 45 45 ரௌடிகள் உள்ளனர். அடுத்து ஏ பிரிவில் 140 பேரும், பி பிரிவில் 225 பேரும் உள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 978 ரௌடிகள் உள்ளதாக அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 250 ரௌடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வெளியே தலைமறைவாக இருக்கும் 728 ரௌடிகளை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் ரௌடிகள் ஒழிப்புப் பிரிவு போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்தப் பகுதியில் உள்ள தலைமறைவு ரௌடிகளை கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நடவடிக்கை மூலம் சென்னையில் உள்ள ரௌடிகளின் நடவடிக்கை விரைவில் கட்டுப்படுத்தப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT