தமிழ்நாடு

கடலில் விடப்பட்ட 123 ஆமை குஞ்சுகள்

DIN

தனுஷ்கோடி அருகே, மன்னார் வளைகுடா பகுதியில் 123 ஆமைக் குஞ்சுகள் வனத் துறையினரால் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதி கரையோரம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ஆமைகள் அதிக அளவில் முட்டையிடுவது வழக்கம். இந்த ஆண்டு தனுஷ்கோடி, கீழமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஆமைகள் வந்து முட்டையிட்டன. இந்த முட்டைகளை, வனத் துறையினர் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்து வந்தனர். 
முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை, தனுஷ்கோடியில் முட்டையிலிருந்து வெளிவந்த 123 ஆமை குஞ்சுகளை வனத் துறையினர் மன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பாக கடலில் விட்டனர். 
இதேபோல், கடந்த ஆண்டு ஆமைகள் முட்டையிட்டுச் சென்றதில், 19 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து வெளி வந்த ஆமை குஞ்சுகளில் 95 சதவீதம் கடலில் விடப்பட்டன. நிகழாண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை பொறிப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என வனத் துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT