தமிழ்நாடு

யானைகள் தொடர் அட்டகாசம்: வனத் துறையினர் இரவு ரோந்து

DIN

திருநெல்வேலி மாவட்டம், கடையம் வனச்சரகம் கடனாநதி அணைப் பகுதியில் தொடர்ந்து யானைகள் தோட்டங்களில் நுழைந்து அட்டகாசம் செய்ததையடுத்து, வனத் துறையினர் வியாழன் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கடையம் வனச்சரகம், கடனாநதி அணை அடிவாரப் பகுதியான பங்களாக்குடியிருப்பு, பெத்தான்பிள்ளைக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. 
இதில், சுமார் 250-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் நாசமாகின. 
2 நாள்கள் தொடர்ந்து யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால், வனத்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் 3 பிரிவாக இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT