உடல் நலனைக் கண்காணிக்கும் மொபைல் கருவிக்கான வழிமுறைகள்: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்
உடல் நலனைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் கைக் கடிகாரம் போன்ற "வின்சென்ஸ்' கருவிக்கான வழிமுறைகளை (அல்காரிதம்) சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடுஉடல் நலனைக் கண்காணிக்கும் மொபைல் கருவிக்கான வழிமுறைகள்: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்
உடல் நலனைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் கைக் கடிகாரம் போன்ற "வின்சென்ஸ்' கருவிக்கான வழிமுறைகளை (அல்காரிதம்) சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
உடல் நலனைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் கைக் கடிகாரம் போன்ற "வின்சென்ஸ்' கருவிக்கான வழிமுறைகளை (அல்காரிதம்) சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவியை ஒரு நோயாளியின் அல்லது ஒரு நபரின் கையில் கட்டிவிட்டால், அது அந்த நபரின் நாடித் துடிப்பு, உடலின் ஆக்ஸிஜன் அளவு, மூச்சுத் திறன், தோல் வெப்பநிலை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட விவரங்களை மிகத் துல்லியமாக பதிவு செய்யும். அதுமட்டுமின்றி தொற்றாத நோய்கள் கண்காணிப்பையும் இந்தக் கருவி மூலம் மேற்கொள்ள முடியும். மெட்லோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வழிமுறைகளை சென்னை ஐஐடி பயன்பாட்டு இயந்திரவியல் துறைப் போராசிரியர் எம். மணிவண்ணன் தலைமையிலானக் குழு இதை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் மணிவண்ணன் கூறுகையில், நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக, உடல் நலனைக் கண்காணிப்பது என்பது இன்றைய காலத்தில் எளிதாகி வருகிறது. வின்சென்ஸ் கருவி மிகத் துல்லியமாக விவரங்களைக் கொடுக்கும் வகையில் இந்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.