ஐசிஏஐ புதிய தலைவர் என்.டி. நவீன் குப்தா
இந்திய கணக்குத் தணிக்கை நிறுவனத்தின் (ஐசிஏஐ) 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக கணக்குத் தணிக்கையாளர் (சிஏ) என்.டி. நவீன் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கணக்குத் தணிக்கை நிறுவனத்தின் (ஐசிஏஐ) 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக கணக்குத் தணிக்கையாளர் (சிஏ) என்.டி. நவீன் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தில்லியைச் சேர்ந்த நவீன் குப்தா, கணக்குத் தணிக்கைத் துறையில் 22 ஆண்டுகள் பணிஅனுபவம் கொண்டவர். 2017-18 ஆம் ஆண்டு ஐசிஏஐ-யின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
இப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோல, ஐசிஏஐ புதிய துணைத் தலைவராக கணக்குத் தணிக்கையாளர் (சிஏ) பி. பிரஃபுல் சாஜெத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர், கணக்குத் தணிக்கைத் துறையில் 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐசிஏஐ கவுன்சிலின் 23 ஆவது கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.