பெண் மாவோயிஸ்டுகள், வழக்குரைஞருக்கு பிப்.19 வரை காவல் நீட்டிப்பு
கரூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான மாவோயிஸ்ட்டுகள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகனுக்கு பிப்.19 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கரூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான மாவோயிஸ்ட்டுகள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகனுக்கு பிப்.19 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளை தெருவில் பதுங்கியிருந்த சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட்கள் கலா (53), சந்திரா (46) ஆகிய இருவரையும் க்யூ பிரிவு போலீஸார் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
மதுரை மாவட்டம் ஆலங்குளம் அன்பு நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகனை கைது செய்தனர். கைதான பெண் மாவோயிஸ்டுகள் மற்றும் வழக்குரைஞர் முருகன் ஆகியோர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நீதிபதி நம்பிராஜன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பிப்.19 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.