தமிழ்நாடு

12 எஸ்.பி.க்கள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு: மத்திய அரசு அனுமதி

DIN

தமிழக காவல்துறையில் பணிபுரியும் 12 காவல் கண்காணிப்பாளர்களை (எஸ்.பி.) டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக காவல்துறையில் கடந்த 2004-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி அடைந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தாமதம் ஏற்பட்டு வந்தது. இருப்பினும், டிஐஜி பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 
இதன் அடுத்தகட்டமாக பணிமூப்பு அடிப்படையில் 12 காவல் கண்காணிப்பாளர்களை டிஐஜி.களாக பதவி உயர்வு வழங்குவதற்குரிய அனுமதியை மத்திய உள்துறை சில தினங்களுக்கு முன்பு வழங்கியது.
இதன்படி, இப்போது காவல் கண்காணிப்பாளர்களாக இருக்கும் கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ்குமார், அஸ்ராகர்க், ஏ.ஜி.பாபு, பி.கே.செந்தில்குமாரி, ஏ.டி.துரைகுமார், சி.மகேஷ்வரி, ஆசியம்மாள், ஏ.ராதிகா, ஆர். லலிதாலட்சுமி, எம்.வி.ஜெயகௌரி, என்.காமினி ஆகியோர் டிஐஜி பதவி உயர்வு பெறுவதற்கு மத்திய உள்துறையின் அனுமதி கிடைத்துள்ளது. இதன் விளைவாக ஓரிரு நாள்களில் இவர்கள் முறைப்படி டிஐஜி.யாக பதவி உயர்த்தப்பட்டு, புதிய பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT