தமிழ்நாடு

நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரை வருகை

DIN

அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு, அவரது இயக்கத்தினர் விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பகல் 12.30-க்கு மதுரை விமான நிலையம் வரும் அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.அழகர் தலைமையில், இயக்கத்தினர் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் சுற்றுச்சாலையில் உள்ள ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் மாலையில் காரில் ராமேசுவரம் செல்லும் அவர் தனுஷ்கோடி சாலையில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். பிப்ரவரி 21-ஆம் தேதி காலை 7.45-க்கு தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் கமல்ஹாசன், குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு கலாமின் சகோதரர் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். பின்னர் கட்சியின் பெயரையும், கொடியையும் அங்கு அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து கலாம் படித்த பள்ளிக்குச் சென்று பார்வையிடுகிறார். காலை 8.50-க்கு கணேஷ் மகாலில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
அங்கிருந்து மதுரை வரும் வழியில் ராமநாதபுரம் அரண்மனைவாசல் அருகே பகல் 12.15-க்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் பரமக்குடி ஐந்து முனை சாலை சந்திப்பு அருகே பிற்பகல் 2.30-க்கும், மானாமதுரை ஸ்ரீபிரியா திரையரங்கம் அருகே மாலை 3 மணிக்கும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 
அதன் பின்னர் மதுரை யா.ஒத்தக்கடையில் வேளாண் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதையொட்டி அப்பகுதியில் தடுப்பு மற்றும் மேடை அமைப்பதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது.
விமான நிலையத்தில் வரவேற்பு...: நடிகர் கமல்ஹாசனின் வருகையையொட்டி விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்புக்கு இயக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அவரது நற்பணி இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேள, தாளங்களுடன் வரவேற்பு அளிக்கும் இயக்கத்தினர், காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். 
இதேபோல் ராமேசுவரத்தில் உள்ள கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT