கமல் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பே இல்லை
தமிழக அரசியலில் கமல் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பே இல்லை என, அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தமிழக அரசியலில் கமல் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பே இல்லை என, அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தான் என்ன செய்கிறோம் என கமலுக்கே தெரியவில்லை. அதனால்தான் அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கியவர்கள் மாற்று கட்சித் தலைவர்களை சந்தித்ததாக வரலாறு இல்லை. கமலின் இச்செயல் கேலிக்கூத்தாக உள்ளது.
அவரது அரசியல் கட்சிப் பயணம் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பே இல்லை. அவர் கட்சி தொடங்கும் நேரமே சரி இல்லை.
ரஜினி வெளிப்படையானவர். என்னைப் பொருத்தவரை, அவர் அரசியலுக்கு வராமலே இருக்கலாம். ரஜினியின் வயதும், சூழ்நிலையும் அரசியலுக்கு ஏற்றதில்லை.
மு.க. அழகிரி வெறுப்பின் விளிம்பில் இருக்கிறார். அதனால்தான் அவர் அரசியலை சாக்கடை என்கிறார். அரசியல் என்பது மக்களுக்காகச் சேவை செய்வது என்றார் அமைச்சர்.