தமிழ்நாடு

எர்ணாகுளம் - எழும்பூர் இடையே சுவிதா சிறப்பு ரயில்

DIN

எர்ணாகுளம்-சேலம் இடையே சுவிதா சிறப்பு ரயில் மே-1 ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வண்டி எண் 82638 எர்ணாகுளம் சந்திப்பு - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில், எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து மே 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45-க்கு வந்தடையும். இந்த சுவிதா சிறப்பு ரயில் ஆலுவா, திரிசூர், ஓட்டப்பாலம், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT