முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முன்னாள் டிஜிபி ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் இன்று ஆஜரானார்.  

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் இன்று ஆஜரானார்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். 

அதன்படி விசாரணை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களையும், புகாருக்கு உள்ளானவர்களையும் விசாரித்து வருகின்றார். அந்த வகையில் விசாரணை ஆணையம் முன் இன்று முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆஜரானார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →