தமிழ்நாடு

மதுரை அருகே ஆசிரியர் திட்டியதால் நான்கு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி! 

மதுரை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் திட்டியதால் நான்கு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

DIN

திருமங்கலம்: மதுரை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் திட்டியதால் நான்கு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்கு ஒன்பதாம் வகுப்பில் பயின்று வரும் மாணவிகள் நான்கு பேரை, சரியாக படிக்கவில்லை என்று வகுப்பு ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன வருத்தமடைந்த அவர்கள் நால்வரும் எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களைக் கண்ட மற்றவர்கள் உடனடியாக செயல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.   

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT