முன்னாள் துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு 2ஆவது முறையாக தள்ளுபடி
லஞ்ச வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கணபதி, பேராசிரியர் எம்.தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுமுன்னாள் துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு 2ஆவது முறையாக தள்ளுபடி
லஞ்ச வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கணபதி, பேராசிரியர் எம்.தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளபடி செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கணபதி, பேராசிரியர் எம்.தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளபடி செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி இடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் இருவரும் ஜாமீன் கோரி கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மீண்டும் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் இருவரது ஜாமீன் மனுவையும் கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.